1 கொரி 15:32 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 நான் எபேசுவில் உலக வாழ்வுக்காக மாத்திரம் கொடிய மிருகங்களோடு போராடியிருந்தால், எனக்குக் கிடைத்த பலன் என்ன? இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால், “நாமும் உண்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்று சொல்லலாமே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 நான் எபேசுவிலே கொடிய மிருகங்களுடனே போராடினேனென்று மனிதர்கள் வழக்கமாகச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்கு பலன் என்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே? Viz kapitolaபரிசுத்த பைபிள்32 எபேசுவில் கொடிய விலங்குகளோடு என் பெருமையை திருப்திப்படுத்தும் எண்ணத்தோடு போராடினேன் என்று கூறினால் எனக்கு எந்த நன்மையுமில்லை. மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவதில்லை என்றால், “நாம் நாளை மரணம் அடையக் கூடுமென்பதால் உண்டு பருகுவோம்.” என்று சொல்லலாமே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 எபேசுவிலே நான் கொடிய மிருகங்களோடு போராடினேனே, நான் உலக நோக்கத்திற்காக மட்டுமே போராடியிருந்தால் எனக்குக் கிடைக்கக் கூடிய பலன்தான் என்ன? இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது இல்லையென்றால் “நாம் நாளை இறந்து போகப் போகின்றோமே, எனவே நாம் உண்டு குடித்து வாழ்வோம்” என்று இருந்திருக்கலாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே? Viz kapitola |