1 கொரி 14:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 நீங்கள் உங்களுடைய ஆவியினாலே இறைவனுக்குத் துதியைச் செலுத்தும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப் பற்றிய கற்றுக்கொள்ளாதவன் உங்கள் மத்தியில் இருந்தால், அவன் எப்படி உங்களது நன்றி செலுத்துதலுக்கு, “ஆமென்” என்று சொல்வான். ஏனெனில், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அவனுக்குத் தெரியாதே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 உங்கள் ஆவியால் நீங்கள் தேவனை வாழ்த்தக்கூடும். நீங்கள் நன்றியறிதலுக்கான பிரார்த்தனையைக் கூறும்போது அதைப் புரிந்துகொள்ளாத ஒருவன் “ஆமென்” என்று சொல்ல முடியாது. ஏன்? அவனுக்கு நீங்கள் சொல்வது என்னவென்று தெரியாது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 அப்படி இல்லாவிட்டால், நீங்கள் உங்களுடைய ஆவியினாலே துதி செலுத்தும்போது ஒரு புதியவன் உங்கள் மத்தியில் இருந்தால், அவன் எப்படி உங்களது துதி செலுத்துதலுக்கு “ஆமென்” சொல்வான். ஏனெனில், நீங்கள் பேசுவது அவனுக்குப் புரியாதே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. Viz kapitola |