1 கொரி 1:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 இறைவனின் ஞானமான திட்டத்தின்படி ஞானத்தால் உலகம் இறைவனை அறிய முடியாததாயிருக்கையில், முட்டாள்தனமாகத் தோன்றுகின்ற எமது பிரசங்கத்தைக்கொண்டு, அதனூடாக விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை மீட்க இறைவன் விருப்பம் கொண்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. Viz kapitola |