1 நாளா 25:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இவர்கள் எல்லோரும் அரசனின் தரிசனக்காரனான ஏமானின் மகன்கள். இவர்களை இறைவன் தம்மை மகிமைப்படுத்தும்படி, தமது வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுக்குக் கொடுத்தார். இறைவன் ஏமானுக்கு பதினான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் கொடுத்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இவர்கள் எல்லோரும் ஏமானின் மகன்களாக இருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினான்கு மகன்களையும் மூன்று மகள்களையும் கொடுத்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 இவர்கள் அனைவரும் ஏமானின் குமாரர்கள். ஏமான் தாவீதின் தீர்க்கதரிசி. ஏமானைப் பலப்படுத்துவதாக தேவன் வாக்களித்துள்ளார். எனவே ஏமானுக்கு அதிக குமாரர்கள். தேவன் அவனுக்கு 14 குமாரர்களையும் 3 குமாரத்திகளையும் கொடுத்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார். Viz kapitola |