லேவியராகமம் 13:6 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 இரண்டாந்தரம் அவனை ஏழாம் நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 இரண்டாவதுமுறை அவனை ஏழாம் நாளில் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தேமல்; அவன் தன் உடைகளைத் துவைத்துச் சுத்தமாக இருப்பானாக. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 திரும்பவும் ஏழாம்நாளில் ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது புண் ஆறி, தோலில் பரவாமல் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது ஒரு சிரங்கு மட்டுமே. அவன் தன் உடைகளைக் கழுவவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 அந்த ஏழு நாட்களும் முடிந்த பிறகு ஆசாரியன் அந்த நோயாளியை மீண்டும் பார்க்கவேண்டும். அப்போது புண்கள் ஆறி இருந்தாலோ, மற்ற பகுதிகளில் பரவாமல் இருந்தாலோ ஆசாரியன் அவன் குணமாகிவிட்டதை அறிவிக்க வேண்டும். அந்தப் புண் வெறும் வடு மட்டுமே. அவன் தன் ஆடைகளைத் தோய்த்து மீண்டும் சுத்தமாக இருக்க வேண்டும். Viz kapitola |