புலம்பல் 2:10 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 மகளாகிய சீயோனின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாக இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; சணலாடை உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் இளம்பெண்கள் தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 சீயோன் மகளின் முதியோர் மவுனமாய் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு, துக்கவுடையை உடுத்திக்கொண்டார்கள். எருசலேமின் இளம்பெண்கள் தங்கள் தலைகளை தரைமட்டும் தாழ்த்தியிருக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 சீயோனின் முதியவர்கள் தரையில் இருக்கின்றனர். அவர்கள் தரையில் அமர்ந்து மௌனமாக இருக்கிறார்கள். தம் தலையில் அவர்கள் தூசியைப் போட்டனர். அவர்கள் கோணியைப் போட்டுக்கொள்கிறார்கள். எருசலேமின் இளம்பெண்கள் துக்கத்தில் தலைகளைக் குனிந்து தரையைப் பார்க்கின்றனர். Viz kapitola |