எரேமியா 9:19 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 எவ்வளவாக அழிக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் இருப்பிடங்களை அவர்கள் இடித்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து ஏற்படுகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 சீயோனிலிருந்து ஒரு புலம்பல் சத்தம் கேட்கப்படுகிறது: “நாங்கள் எவ்வளவாய் அழிந்து போனோம். எங்கள் வெட்கம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது. எங்கள் வீடுகள் பாழாய்க் கிடப்பதால், எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் புறப்படவேண்டும்” என்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 “சீயோனிலிருந்து உரத்த அழுகையின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ‘நாம் உண்மையிலேயே அழிக்கப்பட்டிருக்கிறோம். நாம் உண்மையிலேயே வெட்கப்படுகிறோம்! நாம் நமது நாட்டைவிட்டு விலக வேண்டும். ஏனென்றால், நமது வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது நமது வீடுகள் கற்குவியல்களாக இருக்கின்றன.’” Viz kapitola |