எரேமியா 7:31 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் நெருப்பால் எரிப்பதற்காக, அவர்கள் இன்னோம் மகனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில்போட்டு, எரிப்பதற்காகப் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தில் உயர்ந்த மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். இதை நான் கட்டளையிடவுமில்லை. என் மனதில் நினைக்கவும் இல்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்31 யூதா ஜனங்கள், இன்னோமின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடங்களில் அவர்கள் தமது குமாரர்களையும், குமாரத்திகளையும் கொன்று, பலியாக எரித்தார்கள். இவற்றைச் செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. இவை போன்றவற்றை நான் மனதிலே நினைத்துப் பார்க்கவுமில்லை. Viz kapitola |