சகரியா 4:10 - பரிசுத்த பைபிள்10 ஜனங்கள் சிறுதொடக்கத்துக்காக அவமானம் அடையவேண்டாம். செருபாபேல் தூக்கு நூலோடு கட்டி முடித்த ஆலயத்தை அளந்து சோதிப்பதைப் பார்க்கும்போது ஜனங்கள் உண்மையிலேயே மகிழ்வார்கள். இப்பொழுது நீ பார்த்த ஏழு பக்கமுள்ள கல் கர்த்தருடைய ஒவ்வொரு திசையிலும் பார்க்கிற கண்களை குறிக்கும், அவை பூமியின் மேலே எல்லாவற்றையும் பார்க்கின்றன.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைசெய்யலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய யெகோவாவுடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலை சந்தோஷமாகப் பார்க்கிறது என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 “இது சிறிய செயல்களின் நாளாய் இருந்தாலும் அதை அவமதிக்க வேண்டாம், ஏனெனில் இறைவன் தமது வேலையின் ஆரம்பத்திலும் மகிழ்ச்சிகொள்கிறார். செருபாபேலின் கையில் தூக்குநூலைக் காணும்போது மனிதர் யாவரும் அகமகிழ்வார்கள். நீ கண்ட இந்த ஏழு கண்களும் பூமியைச் சுற்றிப் பார்த்துக் கண்காணிக்கிற யெகோவாவின் கண்களாகும் என்றான்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார். Viz kapitola |