ரோமர் 5:15 - பரிசுத்த பைபிள்15 ஆனால் தேவனுடைய வரமானது ஆதாமின் பாவத்தைப் போன்றதல்ல. அந்த ஆதாமின் பாவத்தால் பலர் மாண்டு போனார்கள். ஆனால் தேவனிடமிருந்து பெற்ற கிருபையானது மிகவும் உயர்ந்தது. இயேசு கிறிஸ்து என்கிற ஒருவரின் கிருபையின் மூலமாகவே பலரும் தேவனுடைய வரத்தைப் பெற்றனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஆனால் இறைவனின் கிருபைவரத்திற்கும் ஆதாமின் மீறுதலுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. எப்படியெனில் ஒரே மனிதனுடைய மீறுதலின் காரணமாக அநேகர் இறந்தார்கள். ஆனால் இறைவனுடைய மகா கிருபையும், இன்னொரு மனிதனாகிய இயேசுகிறிஸ்து என்ற ஒரே மனிதரின் கிருபையினால் நமக்குக் கிடைக்கும் வரமும், அநேகர்மேல் அதிகமாய் நிரம்பி வழிகிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 ஆனால் இலவச அன்பளிப்பான கிருபை வரத்தால் கிடைப்பதையும் ஆதாமின் மீறுதலினால் ஏற்பட்டதையும் ஒப்பிடவே முடியாது. எப்படியெனில் ஒரே மனிதனான ஆதாமின் மீறுதலினால் அநேகர் இறந்தார்கள். ஆனால் இறைவனுடைய கிருபையும், ஒரே மனிதனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பளிப்பாக கிடைக்கும் கிருபை வரமும் அதைவிட அதிகமாக அநேகர் மேல் பெருகி வழிகின்றன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. Viz kapitola |