ரோமர் 4:6 - பரிசுத்த பைபிள்6 தாவீதும் இதையே சொன்னார். ஒரு மனிதனின் செயல்களை தேவன் கவனிக்காவிட்டால் அவன் உண்மையிலேயே மகிழ்ச்சி அடையலாம். இந்த வழி அவனை நல்லவனாக ஏற்றுக்கொள்ளப்படச் செய்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது, Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 நல்ல செயல்களினால் அல்லாமல் இறைவனால் நீதிமானாகக் கணக்கிடப்படுகின்ற மனிதனுடைய ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீதும் இவ்விதமாய் கூறுகிறார்: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு: Viz kapitola |