ரோமர் 14:20 - பரிசுத்த பைபிள்20 உணவு உண்ணுவதால் தேவனுடைய வேலையை அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து உணவும் உண்பதற்கு ஏற்றதே. ஆனால் நாம் உண்ணும் உணவு மற்றவர்கள் பாவத்தில் விழுவதற்கு ஏதுவாக இருந்தால் அது தவறாகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 உணவுக்காக இறைவனுடைய வேலையை அழித்துப்போட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் சாப்பிடும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் சாப்பிடுவது தீயதுதான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 உணவுக்காக இறைவனுடைய வேலையின் பலனை அழித்துவிட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் உண்ணும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் உண்ணுவது தவறானதாயிருக்கும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். Viz kapitola |