ரோமர் 14:11 - பரிசுத்த பைபிள்11 “ஒவ்வொருவனும் எனக்கு முன்பு தலை வணங்குவான். ஒவ்வொருவனும் தேவனை ஏற்றுக்கொள்வான். நான் வாழ்வது எப்படி உண்மையோ அப்படியே இவை நிகழும் என்று கர்த்தர் கூறுகின்றார்” என்று எழுதப்பட்டுள்ளது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அப்படியே: “முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும், நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 எழுதப்பட்டிருக்கிறபடியே: “ ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்; ஒவ்வொரு நாவும் இறைவனை அறிக்கையிடும் என்பதும் நிச்சயம்’ ” என்று கர்த்தர் சொல்கிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 இறைவாக்கினனால் எழுதியிருக்கின்றபடி: “ ‘ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக அடிபணிந்து மண்டியிடும்; ஒவ்வொரு நாவும் இறைவனை ஏற்று ஒப்புக்கொள்ளும்.’ இதை நான் வாழ்ந்திருக்கின்றபடியே ஆணையிட்டு சொல்கிறேன்” என்று கர்த்தர் சொல்கின்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. Viz kapitola |