வெளிப்படுத்தல் 9:6 - பரிசுத்த பைபிள்6 அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப்போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அந்த நாட்களில் மனிதர்கள் மரித்துப்போவதற்கான வழியைத் தேடுவார்கள். ஆனாலும் அவர்கள் மரிக்கமாட்டார்கள், சாகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால், சாவோ அவர்களுக்கு விலகி தூரமாக ஓடிப்போகும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அந்நாட்களில் மனிதர்கள் சாவைத் தேடுவார்கள், ஆனால் அவர்கள் அதைக் காணமாட்டார்கள். அவர்கள் சாவதற்கு விரும்புவார்கள், ஆனால் சாவோ அவர்களைவிட்டு ஓடிப்போகும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அந்நாட்களில் மனிதர்கள் மரணத்தைத் தேடுவார்கள், ஆனால் அவர்கள் அதைக் கண்டடைய மாட்டார்கள். அவர்கள் மரணத்தை விரும்புவார்கள், ஆனால் மரணமோ அவர்களைவிட்டு ஓடிப் போகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போகும். Viz kapitola |