Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 14:14 - பரிசுத்த பைபிள்

14 நான் பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு வெண்ணிற மேகத்தைக் கண்டேன். அம்மேகத்தின் மீது மனித குமாரனைப் போன்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது தலையில் பொன் கிரீடம் இருந்தது. அவரது கையிலோ கூர்மையான அரிவாள் இருந்தது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனிதகுமாரனைப்போல தமது தலையின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கூர்மையான அரிவாளையும் வைத்திருக்கும் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 பின்பு நான் பார்த்தபொழுது, எனக்கு முன்பாக ஒரு வெள்ளை மேகத்தைக் கண்டேன். அந்த மேகத்தின்மேல் மானிடமகனைப் போல், ஒருவர் அமர்ந்திருந்தார். அவருடைய தலையின்மேல் ஒரு தங்கக்கிரீடமும், கையிலே ஒரு கூரிய அரிவாளும் இருந்தன.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 பின்பு நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக ஒரு வெண்ணிற மேகத்தையும், அந்த மேகத்தின் மேல் மனுமகனைப் போல் ஒருவர் அமர்ந்திருப்பதையும் கண்டேன். அவருடைய தலையில் ஒரு தங்கக் கிரீடமும், கையில் கூர்மையான ஒரு அரிவாளும் இருந்தன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 14:14

Následuj nás:

Reklamy


Reklamy