மாற்கு 9:1 - பரிசுத்த பைபிள்1 பிறகு இயேசு “நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். இங்கே நிற்கின்ற மக்களில் சிலர், அவர்கள் மரணத்துக்கு முன் தேவனுடைய இராஜ்யம் வருவதைப் பார்ப்பார்கள். தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வரும்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 பின்பு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன், மரணமடைய மாட்டார்கள்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 andriyum, avar avarhaɹlai nōki: ‘ingē nitkir̄avarhaɹlil silar dhēvanuɹdaiya rājyam balathōɹdē varuvadhai kāɹnumun, maraɹnathai rusibārpadhillai endru, meiyāhavē ungaɹluku j̄olluhirēn,’ endrār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 பின்பு இயேசு அவர்களிடம், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன் மரணமடைய மாட்டார்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitola |