மாற்கு 8:6 - பரிசுத்த பைபிள்6 இயேசு அந்த மக்களைத் தரையில் உட்காரச் சொன்னர். பிறகு அவர் ஏழு அப்பங்களையும் எடுத்து தேவனுக்கு நன்றி சொன்னார். இயேசு அப்பங்களைப் பங்குவைத்து சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு இயேசு கேட்டுக்கொண்டார். சீஷர்கள் அவர் சொன்னபடி செய்தனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இயேசு அங்கிருந்த மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அவர் அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு, அந்த மக்களுக்குக் கொடுக்கும்படி, தமது சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 apoɹudhu avar janangaɹlai tharaiyilē pandhi yiruka kaɹtaɹlaiyiɹtu, andha yēɹu apangaɹlaiyum eɹduthu, sthōthiram paɹnni, piɹtu, avarhaɹluku parimār̄umbaɹdi sīsharhaɹl iɹdathil koɹduthār; avarhaɹl janangaɹluku parimār̄inārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அப்போது அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தாரைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்திய பின், அவற்றைத் துண்டுகளாக்கி, மக்களுக்குக் கொடுக்கும்படி அதைத் தமது சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, இந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். Viz kapitola |