மாற்கு 11:18 - பரிசுத்த பைபிள்18 தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)18 adhai vēdhabāraharum piradhāna āsāriyarum kēɹtu, avarai kolai seiya vahai thēɹdinārharl; āhilum janangaɹl ellārum avaruɹdaiya ubadhēsathai kur̄ithu āj̄ariya paɹtabaɹdiyinālē avaruku bayandhirundhārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது அவரைக் கொலை செய்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனாலும், கூடியிருந்த மக்கள் கூட்டத்தார் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்ததால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள். Viz kapitola |