மாற்கு 10:46 - பரிசுத்த பைபிள்46 பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் குமாரன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்46 பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202246 அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)46 pinbu avarhaɹl jerikōvuku vandhārhaɹl. avarum avaruɹdaiya sīsharhaɹlum thiraɹlāna janangaɹlum jerihōvai viɹtu pur̄apaɹduhir̄a bōdhu, thimēyuvin mahan āhiya bardhimēyu yengir̄a oru kuruɹdan, vaɹiyaruhē uɹtkārndhu, pij̄ai kēɹtu koɹndirundhān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு46 அதன்பின் அவர்கள் எரிகோவுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசுவும், அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமான மக்களோடு அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் பார்வையற்ற ஒருவன் வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)46 பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். Viz kapitola |