மாற்கு 1:27 - பரிசுத்த பைபிள்27 மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)27 ellārum āj̄ariyapaɹtu: ‘idhu enna? indha pudhiya ubadhēsam epaɹdi partadhu? ivar adhihārathōɹdē asutha āvihaɹlukum kaɹtaɹlai yiɹduhirār, avaihaɹl ivaruku kīɹpaɹdihir̄adhē,’ endru thangaɹlukuɹllē oruvarōɹdoruvar sollikoɹndārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 எல்லோரும் வியப்படைந்து, “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கின்றதே! இவர் தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். Viz kapitola |