Online Bible

- Reklamy -




மத்தேயு 13:33 - பரிசுத்த பைபிள்

33 இயேசு மக்களுக்கு மேலும் ஒரு உவமையைக் கூறினார், “பரலோக இராஜ்யமானது ஒரு பெண் மாவுடன் கலக்கும் புளித்த பழைய மாவைப் போன்றது. புளித்த மாவானது அனைத்து மாவையும் புளிக்க வைக்கிறது” என்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

33 அவர் அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, புளிப்பூட்டும் பதார்த்தத்திற்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் மிகவும் அதிகளவான மாவிலே புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் கலந்து வைத்தாள். அது மாவு முழுவதற்கும் புளிப்பூட்டியது” என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

Viz kapitola kopírovat




மத்தேயு 13:33

Následuj nás:

Reklamy


Reklamy