லூக்கா 5:36 - பரிசுத்த பைபிள்36 அவர்களுக்கு இயேசு கீழ்வரும் உவமையைக் கூறினார். “ஒரு பழைய அங்கியின் கிழிசலைத் தைக்க ஒருவரும் புதிய அங்கியின் ஒரு பகுதியைக் கிழிப்பதில்லை. ஏன்? அது புதிய அங்கியைப் பாழாக்குவது மட்டுமன்றி, புதிய அங்கியின் துணி பழைய துணியைப்போல் இருப்பதுமில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 பின்பு இயேசு அவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறினார்: “ஒருவனும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும். புதிய துண்டும் பழைய ஆடைக்குப் பொருந்தாது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 அத்தோடு, அவர் அவர்களுக்கு இந்த விளக்க உதாரணத்தையும் சொன்னார்: “ஒருவனுமே ஒரு புதிய உடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்தெடுத்து, அதை ஒரு பழைய உடையில் ஒட்டுப் போட்டுத் தைப்பதில்லை. அப்படிச் செய்தால் புதிய உடையும் கிழியும், புதியதிலிருந்து அவன் கிழித்தெடுத்து தைத்த துண்டும் பழைய உடைக்குப் பொருந்தாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது. Viz kapitola |