லேவியராகமம் 22:3 - பரிசுத்த பைபிள்3 உங்களது சந்ததியார் எவரும் அப்பொருட்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுள்ளவர்களாகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அப்பொருட்களை எனக்குக் கொடுத்தனர். நானே கர்த்தர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் யாராவது தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகள் அருகில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் யெகோவா. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் உன் சந்ததிகளில் எவனும், சம்பிரதாயப்படி அசுத்தமாய் இருந்தும், இஸ்ரயேலர் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும் பரிசுத்த காணிக்கைக்குச் சமீபமாய் வருவானாகில், அவன் என் சமுகத்திலிருந்து அகற்றப்படவேண்டும். நானே யெகோவா. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர். Viz kapitola |