புலம்பல் 1:9 - பரிசுத்த பைபிள்9 எருசலேமின் ஆடைகள் அழுக்காயின. அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை. பார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது. அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. “கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும். எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுபவர்கள் இல்லை; யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்; பகைவன் பெருமைபாராட்டினானே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது; அவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவில்லை. ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது; அவளை தேற்றுவார் ஒருவரும் இல்லை. “யெகோவாவே, என்னுடைய துன்பத்தைப் பாரும்; என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே” என்று அழுகிறாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே. Viz kapitola |