யோசுவா 19:51 - பரிசுத்த பைபிள்51 இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களுக்கும் இந்த தேசப் பகுதிகள் முழுவதும் பிரித்து கொடுக்கப்பட்டன. நிலத்தைப் பங்கிட ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் குமாரனாகிய யோசுவா, ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீலோவில் ஒருமித்துக் கூடினார்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் கர்த்தருக்கு முன்னர் அவர்கள் சந்தித்து, தேசத்தைப் பங்கிட்டு முடித்தனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்51 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202251 இவ்வாறு இந்த நிலப்பரப்புகளை ஆசாரியனான எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, இஸ்ரயேல் கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீட்டுப்போட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் சீலோவின் சபைக்கூடார வாசலில் இவ்வாறு நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இவ்வாறு அவர்கள் நாட்டைப் பங்கிட்டு முடித்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)51 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள். Viz kapitola |