எரேமியா 44:26 - பரிசுத்த பைபிள்26 ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு …” என்று சத்தியம் செய்யமாட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா மக்களாகிய நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய உயிருள்ள வாக்கு என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூத மனிதன் வாயினாலும் இனி என் பெயர் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான பெயரைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 ஆனாலும் எகிப்தில் குடியிருக்கும் யூதா மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ‘எனது மகத்தான பெயரால் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘யூதாவிலிருந்து வந்து எகிப்தில் எங்கேயாவது வாழும் ஒருவனாவது, இனியொருபோதும், “ஆண்டவராகிய யெகோவா இருப்பது நிச்சயம்போல்” என்று ஆணையிடவோ, எனது பெயரை கூப்பிடவோ மாட்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். Viz kapitola |