எரேமியா 31:19 - பரிசுத்த பைபிள்19 கர்த்தாவே, நான் உம்மை விட்டு அலைந்து திரிந்தேன். ஆனால் நான் செய்த தீயவற்றைப்பற்றி கற்றுக்கொண்டேன். எனவே நான் எனது வாழ்வையும் மனதையும் மாற்றிக்கொண்டேன். நான் இளமையாக இருந்தபோது செய்த முட்டாள்தனமான செயல்களை எண்ணி நான் அவமானமும் நிந்தையும் அடைகிறேன்’” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 நான் திரும்பினபின்பு மனவேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு மார்பில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி தலைகுனிந்துகொண்டும் இருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 நான் வழிதவறிப் போனபின், மனந்திரும்பினேன். எனக்கு விளங்கும் ஆற்றல் வந்தபின், என் மார்பில் அடித்துக்கொண்டேன். என் வாலிபத்தின் நிந்தையைச் சுமந்ததினால், நான் வெட்கப்பட்டு சிறுமைப்பட்டேன்.’ Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன். Viz kapitola |