எரேமியா 20:11 - பரிசுத்த பைபிள்11 ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்; கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார். எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள். அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள். அவர்கள் ஏமாந்துப் போவார்கள். அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள். ஜனங்கள் அந்த அவமானத்தை என்றென்றும் மறக்கமாட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஆனாலும், யெகோவா வலிமையுள்ள போர்வீரனைப்போல் என்னுடன் இருக்கிறார். ஆகையால் என்னைத் துன்புறுத்துகிறவர்கள் இடறுவார்கள்; அவர்கள் என்னை மேற்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தோற்றுப்போய் மிகவும் அவமானம் அடைவார்கள்; அவர்களின் அவமானம் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும். Viz kapitola |