எரேமியா 15:18 - பரிசுத்த பைபிள்18 நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்? என்று எனக்குப் புரியவில்லை. எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை? அல்லது குணப்படுத்த முடியவில்லை? என்பது எனக்குப் புரியவில்லை. கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன். நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர். நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 ஏன் என்னுடைய வேதனை முடிவடையாமல் இருக்கிறது. ஏன் எனது காயம் கடுமையாயும், ஆறாமலும் இருக்கிறது? நீர் எனக்கு ஒரு ஏமாற்றும் நீரோடையைப் போலவும், ஊற்றெடுக்காத ஓடையைப் போலவும் இருப்பீரோ? என்றேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ? Viz kapitola |