நியாயாதிபதிகள் 20:26 - பரிசுத்த பைபிள்26 பின் இஸ்ரவேலர் பெத்தேல் நகரம் வரைக்கும் சென்றனர். அந்த இடத்தில் அமர்ந்திருந்து கர்த்தரை நோக்கி அழுதனர். அன்று மாலைவரை நாள் முழுவதும் அவர்கள் எதுவும் உண்ணவில்லை. அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியையும், சமாதான பலிகளையையும் செலுத்தினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அப்பொழுது இஸ்ரவேல் போர்வீரர்களும் எல்லா மக்களும் புறப்பட்டு, பெத்தேலுக்குப் போய், அங்கே யெகோவாவுக்கு முன்பாக அழுது, உட்கார்ந்து, அன்று மாலைவரை உபவாசித்து, யெகோவாவுக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அப்பொழுது இஸ்ரயேல் மனிதரும் எல்லா மக்களும் பெத்தேலில் ஒன்றுகூடி யெகோவாவிடம் அழுது கொண்டேயிருந்தார்கள். அன்று சாயங்காலம்வரை அவர்கள் உபவாசித்து, தகனபலியையும், சமாதான பலியையும் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு, Viz kapitola |