யாக்கோபு 2:12 - பரிசுத்த பைபிள்12 உங்களை விடுவிக்கிற சட்டத்தால் நியாயந்தீர்க்கப்பட்ட மக்களைப்போல நீங்கள் பேசவும் வாழவும் வேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 விடுதலை அளிக்கும் சட்டத்தின் அடிப்படையிலேயே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படப் போகிறபடியால் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 விடுதலையின் சட்டத்தின் அடிப்படையில் நீங்கள் நியாயம் தீர்க்கப்படப் போகின்றபடியால் பேச்சிலும், செயலிலும் கவனமாயிருங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப் போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். Viz kapitola |