Online Bible

- Reklamy -




ஏசாயா 57:8 - பரிசுத்த பைபிள்

8 பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய். அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய். அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய். நீ என்னோடு இருந்தாய். ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய். என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய். கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய். பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் படுக்கையை அகலமாக்கி, அவர்களுடன் உடன்படிக்கைசெய்தாய்; அவர்களுடைய படுக்கையைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால் நீ உனது தெய்வச் சின்னங்களை வைத்தாய். என்னைக் கைவிட்டு உன் படுக்கையை விரித்தாய், அதிலேறி அதை அகலமாக்கினாய்; நீ எவர்களுடைய படுக்கையை விரும்பினாயோ அவர்களோடு ஒப்பந்தம் செய்தாய், நீ அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்த்தாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.

Viz kapitola kopírovat




ஏசாயா 57:8

Následuj nás:

Reklamy


Reklamy