ஏசாயா 51:13 - பரிசுத்த பைபிள்13 கர்த்தர் உன்னைப் படைத்தார்! அவர் தமது வல்லமையால் பூமியைப் படைத்தார்! அவர் தமது வல்லமையால் பூமிக்கும் மேல் வானத்தை விரித்து வைத்தார். ஆனால், நீ அவரையும் அவரது வல்லமையையும் மறந்துவிட்டாய். எனவே, நீ எப்பொழுதும் கோபங்கொண்ட உன்னைப் பாதிக்கும் ஜனங்களுக்குப் பயப்படுகிறாய். அவர்கள் உன்னை அழிக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் எங்கே உள்ளனர்? அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 துன்பம் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய கடுங்கோபத்திற்கு எப்போதும் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? துன்பம் செய்கிறவனுடைய கடுங்கோபம் எங்கே? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 வானங்களை விரித்து, பூமியின் அஸ்திபாரங்களை அமைத்த, உன் படைப்பாளரான யெகோவாவை நீ மறந்திருக்கிறாயே! அதனால் அழிக்கக் காத்திருக்கும் ஒடுக்குகிறவனுடைய கோபத்திற்கு தினமும் இடைவிடாமல் நீ அஞ்சுகிறாயே! ஒடுக்குபவனின் கடுங்கோபம் எங்கே? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 இடுக்கண் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண் செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே? Viz kapitola |