ஏசாயா 45:1 - பரிசுத்த பைபிள்1 கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா, கோரேசைப்பற்றி இவற்றைக் கூறுகிறார்: “நான் கோரேசின் வலது கையைப் பற்றிக்கொள்வேன். ராஜாக்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன். நகரத் கதவுகள் கோரேசைத் தடுத்து நிறுத்தாது. நான் நகரக் கதவுகளைத் திறப்பேன்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 “அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது, அவனுக்கு முன்பாக நாடுகளை அடக்கும்படியும், அரசர்களின் போர் ஆயுதங்களை களையப்பண்ணும்படியும், அவனுக்கு முன்பாக வாசல்கள் மூடாதபடி கதவுகள் திறக்கப் பண்ணும்படியும் நான் அவனுடைய வலதுகையை தாங்கிப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்வதாவது: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: Viz kapitola |