ஏசாயா 23:18 - பரிசுத்த பைபிள்18 ஆனால் தீரு தான் சம்பாதிக்கும் பணத்தைத் தனக்கென்று வைக்காது. தனது வணிகத்தால் வரும் லாபத்தை தீரு கர்த்தருக்காகப் பாதுகாக்கும். தீரு அச்செல்வத்தை கர்த்தருக்குச் சேவை செய்யும் ஜனங்களுக்குக் கொடுக்கும். எனவே, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் முழுமையாக சாப்பிடுவார்கள், அவர்கள் மென்மையான ஆடைகளை அணிந்துகொள்வார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 ஆயினும் அவளது இலாபமும், வருமானமும் யெகோவாவுக்கென்று ஒதுக்கி வைக்கப்படும். அவை சேமித்து வைக்கப்படவோ, பதுக்கி வைக்கப்படவோ மாட்டாது. அவளுடைய அந்த இலாபம் யெகோவாவுக்கு முன்பாக இருப்போருக்கான போதிய அளவு உணவுக்கும், சிறந்த உடைகளுக்குமே செலவிடப்படும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அதின் வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாய்ச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும். Viz kapitola |