எபிரெயர் 9:15 - பரிசுத்த பைபிள்15 கிறிஸ்து இறந்ததால், புதிய உடன்படிக்கையின் நடுவராக அவர் ஆனார். இப்போது முதல் உடன்படிக்கையின் கீழ் செய்த தவறுகளில் இருந்து மக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் மரணம் ஒன்றிருந்தது. அதனால், அழைக்கப்பட்டவர்கள் என்றென்றும் உரிமைகளைப் பெறுவர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 இவ்வாறு முதலாவது உடன்படிக்கையின் கீழிருந்தபோது, மக்கள் செய்த பாவங்களிலிருந்து அவர்களை மீட்கின்ற பலியாக இயேசுவின் மரணம் நிறைவேறியது. இதனூடாக அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் இறைவனால் வாக்குறுதியளிக்கப்பட்ட நித்தியமான உரிமைச் சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படி, அவர் ஒரு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கின்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். Viz kapitola |