எபிரெயர் 7:21 - பரிசுத்த பைபிள்21 ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார். “‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’ என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார். மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” என்றும் அவர் சொன்னார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’ ” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஆனால் இயேசுவோ மதகுருவாய் ஏற்படுத்தப்பட்டபோது இறைவனுடைய ஆணையின் மூலமாய் உறுதிப்படுத்தப்பட்டு நியமிக்கப்பட்டார். இறைவன் அவரைக் குறித்து, “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தமது மனதை மாற்ற மாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் மதகுருவாய் இருக்கின்றீர்’ ” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, Viz kapitola |