எபிரெயர் 5:5 - பரிசுத்த பைபிள்5 கிறிஸ்துவின் செயலும் அப்படித்தான். பிரதான ஆசாரியன் ஆகும் பெருமைக்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். அவர் கிறிஸ்துவிடம், “நீர் எனது குமாரன். இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்” என்று கூறினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்று அவரோடு சொன்னவரே அவரை உயர்த்தினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அவ்விதமாகவே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு அந்த மகிமையை தனதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக்குறித்து சொல்லியிருக்கிறதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அவ்விதமாகவே கிறிஸ்துவும் தலைமை மதகுருவாகும் அந்த மகிமையைத் தாமே தமது விருப்பத்தின் பேரில் தமதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக் குறித்து சொல்லியிருக்கின்றதாவது, “நீர் என்னுடைய மகன், இன்று நான் உமக்குத் தந்தையானேன்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். Viz kapitola |