எபிரெயர் 3:1 - பரிசுத்த பைபிள்1 எனவே, நீங்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பினார். அவர் நம் விசுவாசத்தின் பிரதானஆசாரியர் ஆவார். எனது பரிசுத்தமான சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்காகக் கூறுகிறேன். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இப்படியிருக்க, பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்களான பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கையிடுகிற நமது அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாகிய இயேசுவைப்பற்றி சிந்தியுங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கின்றவர்களான பரிசுத்த சகோதரர்களே, நமது விசுவாச அறிக்கையின்படி நாம் ஒப்புக்கொள்ளுகின்ற நமது அப்போஸ்தலரும் தலைமை மதகுருவுமாகிய இயேசுவிடம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள். Viz kapitola |