எபிரெயர் 10:11 - பரிசுத்த பைபிள்11 ஒவ்வொரு நாளும் ஆசாரியர்கள் நின்றுகொண்டு தமது மதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவர்கள் மீண்டும், மீண்டும் அதே பலிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அப்பலிகள் ஒருபோதும் பாவங்களை நீக்காது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அன்றியும், எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும், பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஒவ்வொரு ஆசாரியனும் நாள்தோறும் இறைசமுகத்தில் நின்று, தனது பணிகளைச் செய்கிறான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத்திரும்ப செலுத்துகிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஒவ்வொரு மதகுருவும், நாள்தோறும் இறை சந்நிதியில் நின்று தனது பணிகளைச் செய்கின்றான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத் திரும்ப செலுத்துகிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். Viz kapitola |