எபிரெயர் 1:4 - பரிசுத்த பைபிள்4 அவர் தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயரை தேவனிடமிருந்து பெற்றார். அவர் தேவதூதர்களை விட மிகவும் சிறப்புக்குரியவரானார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 இவ்விதமாய் இறைவனின் மகனாகிய கிறிஸ்து இறைத்தூதர்களிலும் மேன்மையானவர் ஆனார். இவருக்கு இறைவன் கொடுத்த பெயரும் இறைத்தூதர்களின் பெயரிலும் மேன்மையானதே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 இறைதூதர்களின் பெயர்களைவிட, தமது உரிமைச் சொத்தாக இவர் பெற்றுக்கொண்ட பெயர் மேன்மையானதாக இருக்கின்றது. அதற்கேற்ப, தூதர்களைவிட இவர் மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார். Viz kapitola |