Online Bible

- Reklamy -




ஆதியாகமம் 19:15 - பரிசுத்த பைபிள்

15 அடுத்த நாள் காலையில் தேவதூதர்கள் லோத்தை வெளியேற விரைவுபடுத்தினார்கள். அவர்கள், “இந்நகரம் தண்டிக்கப்படும். எனவே, உனது மனைவியையும், இரண்டு பெண்களையும், இன்னும் உன்னோடு வருகிறவர்களையும், அழைத்துக்கொண்டு இந்த இடத்தைவிட்டு விலகிப் போ. அவ்வாறு செய்தால் நீ இந்நகரத்தோடு அழியாமல் இருப்பாய்” என்றனர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 விடியற்காலமானபோது அந்தத் தூதர்கள் லோத்தை நோக்கி: “பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாமலிருக்க எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டுபோ” என்று சொல்லி, அவனை அவசரப்படுத்தினார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 பொழுது விடியும்போது, தூதர்கள் லோத்தைப் பார்த்து, “இங்கே இருக்கும் உன் மனைவியையும், உன் இரு மகள்களையும் கூட்டிக்கொண்டு, விரைவாக வெளியேறு; இல்லாவிட்டால் இப்பட்டணம் தண்டிக்கப்படும்போது நீயும் அழிந்துபோவாய்” என்றார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.

Viz kapitola kopírovat




ஆதியாகமம் 19:15

Následuj nás:

Reklamy


Reklamy