கலாத்தியர் 5:11 - பரிசுத்த பைபிள்11 சகோதர சகோதரிகளே! மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் என்றும் போதித்ததில்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் ஏன் இவ்வாறு துன்பப்பட வேண்டும்? மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தால் சிலுவையை ஏற்பதுபற்றி வரும் தடை நிறுத்தப்பட்டிருக்கும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியம்தான் என்று நான் இன்னும் பிரசங்கித்தால், நான் ஏன் இன்னும் யூதர்களால் துன்புறுத்தப்படுகிறேன்? அப்படி நான் பிரசங்கிப்பது உண்மை என்றால், கிறிஸ்துவின் சிலுவையின் காரணமாய் வரும் துன்புறுத்தல் நின்று போயிருக்குமே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியமென்று சொல்லி நான் இன்னும் பிரசங்கித்தேன் என்றால், ஏன் நான் இன்னும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? அப்படிப் பிரசங்கித்திருந்தால் சிலுவையின் பொருட்டு உண்டாகும் எதிர்ப்பு நீங்கியிருக்குமே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. Viz kapitola |