யாத்திராகமம் 40:15 - பரிசுத்த பைபிள்15 அவர்களது தந்தைக்கு செய்தபடியே அவர்கள் மேலும் எண்ணெயை ஊற்றி அவர்களையும் பரிசுத்தப்படுத்து. அப்போது அவர்களும் ஆசாரியப் பணிவிடை செய்யமுடியும். அவர்கள்மேல் அபிஷேக எண்ணெயை ஊற்றும்போது, அவர்கள் ஆசாரியர் ஆவார்கள். வரும் காலங்களில் எல்லாம் அவர்கள் குடும்பத்தினர் ஆசாரியர்களாகவே இருப்பார்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அவர்கள் எனக்கு ஆசாரியப் பணிசெய்யும்படி, அவர்களுடைய தகப்பனை அபிஷேகம் செய்ததுபோலவே அவர்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் பெற்ற இந்த, ‘அபிஷேகம்’ தலைமுறைதோறும் நீடித்திருக்கும் ஆசாரியத்துவத்திற்கான அபிஷேகமாய் இருக்கும்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார். Viz kapitola |