எபேசியர் 6:6 - பரிசுத்த பைபிள்6 அவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கும்போது மட்டும் நல்லெண்ணத்தைப் பெற உங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியக் கூடாது; நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போலக் கீழ்ப்படியுங்கள். தேவன் விரும்புவதை நீங்கள் முழு மனதுடன் செய்யுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 மனிதர்களுக்குப் பிரியமாக இருக்கவிரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் அப்படிக் கீழ்ப்படியாமல், உங்கள் முழு இருதயத்தோடும் இறைவனுடைய சித்தத்தைச் செய்யும் கிறிஸ்துவின் அடிமைகளைப்போல கீழ்ப்படியுங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 தாம் மேற்பார்வை செய்யப்படும்போது மட்டும் கீழ்ப்படிகின்றவர்களைப் போலவோ அல்லது மனிதரை பிரியப்படுத்துவதற்காக மட்டும் கீழ்ப்படிகின்றவர்களைப் போலவோ இல்லாமல், இறைவனுடைய விருப்பத்தை முழு மனதோடு நிறைவேற்றும் கிறிஸ்துவின் அடிமைகளைப் போல கீழ்ப்படியுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். Viz kapitola |