உபாகமம் 15:18 - பரிசுத்த பைபிள்18 “உங்கள் அடிமைகளை விடுதலையாக்கி அனுப்பிவிடுவதை தவறாக எண்ண வேண்டாம். ஆறு ஆண்டுகளாக ஒரு வேலையாளுக்குரிய சம்பளத்தில் பாதிக் கூலிக்கு அவர்கள் உங்களுக்கு சேவை செய்ததை எண்ணிப்பாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 ஒரு அடிமையை விடுதலையாக்குவதை கஷ்டமான செயலாக எண்ணவேண்டாம். ஏனெனில் அவன் ஆறு வருடங்களில் செய்த வேலை கூலி வேலைசெய்யும் ஒருவனைவிட இருமடங்கு மதிப்புடையது. உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் செய்யும் யாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார். Viz kapitola |