தானியேல் 9:26 - பரிசுத்த பைபிள்26 62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா கொல்லப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த இடத்தையும் வரப்போகிற பிரபுவின் மக்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு வெள்ளப்பெருக்கத்தைப்போல இருக்கும்; முடிவுவரை போரும் அழிவும் உண்டாக நியமிக்கப்பட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அறுபத்திரண்டு ‘ஏழுகளின்’ பின் அபிஷேகம் செய்யப்பட்டவர் நீக்கப்பட்டு ஒன்றுமில்லாதிருப்பார். வரப்போகும் ஆளுநனின் மக்கள் பட்டணத்தையும், பரிசுத்த ஆலயத்தையும் அழித்துப்போடுவார்கள். முடிவு வெள்ளம்போல் வரும். முடிவுவரை யுத்தம் தொடரும். அழிவுகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. Viz kapitola |