அப்போஸ்தலர் 26:24 - பரிசுத்த பைபிள்24 பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 அந்நேரத்தில் பெஸ்து குறுக்கிட்டு பவுலிடம், “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!” உனது அதிக படிப்பினால் “உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 இப்படியாக பவுல் தனது சார்பாகப் பேசிக் கொண்டிருந்தபோது பெஸ்து குறுக்கிட்டு, “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! உனது அதிக படிப்பினால் உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். Viz kapitola |