அப்போஸ்தலர் 19:35 - பரிசுத்த பைபிள்35 நகர அலுவலன் மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினான். அவன், “எபேசுவின் மக்களே! ஆர்தமிஸ் தேவியின் தேவாலயத்தையும் பரலோகத்திலிருந்து விழுந்த அவளது பரிசுத்தப் பாறையையும் பெற்ற நகரம் எபேசு என்பதை எல்லா மக்களும் அறிவர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 பட்டணத்து அவைத்தலைவன் மக்களை அமைதிப்படுத்தி: எபேசியர்களே, இந்த பட்டணம் மகா தேவியாகிய தியானாளின் கோவிலும் வானத்திலிருந்து விழுந்த சிலையையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கிறதென்று அறியாதவன் உண்டோ? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 அந்த நகரத்தின் ஆணையாளர், மக்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தி அவர்களிடம், “எபேசு பட்டணத்தாரே, பெரிதான அர்த்தமிஸ் உருவச்சிலை வானத்திலிருந்து விழுந்தது என்பதையும், இந்த தேவதைக்கும் உருவச்சிலைக்கும், எபேசு பட்டணமே பாதுகாப்பு இடமாக இருக்கிறது என்பதையும் இந்த முழு உலகமும் அறியுமே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 அந்த நகரத்தின் ஆணையாளர், மக்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தி அவர்களிடம், “எபேசு பட்டணத்தாரே, மகா அர்த்தமிஸ் உருவச் சிலையானது வானத்திலிருந்து விழுந்தது என்பதையும், இந்த தேவதைக்கும் உருவச் சிலைக்கும் எபேசு பட்டணமே பாதுகாவலின் இடமாக இருக்கின்றது என்பதையும் இந்த முழு உலகமும் அறியுமே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ? Viz kapitola |