அப்போஸ்தலர் 15:23 - பரிசுத்த பைபிள்23 அக்கூட்டத்தினர் அவர்கள் மூலமாக அக்கடிதத்தை அனுப்பினார்கள். அக்கடிதம் கூறியது: அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், சகோதரர்களிடமிருந்து, அந்தியோகியாவிலும், சிரியாவிலும், சிலிசியாவிலுமுள்ள அன்பான யூதரல்லாத சகோதரருக்கு: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அவர்களுடன் இவ்வாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்: உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும், அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் இருக்கிற யூதரல்லாத விசுவாசிகளான உங்களுக்கு எழுதுகிறதாவது: உங்களுக்கு வாழ்த்துகள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அவர்களுடன் இவ்விதமாய் ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்: அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் இருக்கின்ற யூதரல்லாத விசுவாசிகளான உங்களுக்கு, உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் எழுதுவதாவது: உங்களுக்கு வாழ்த்துதல்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்: Viz kapitola |